-
24. தீர்வு-1
மதிய உணவு உண்ட பின் உரையாடல் மீண்டும் தொடங்கியது “செயற்கை மழை, அண்டவெளியில் சூரிய ஒளியை பிரதிபலிக்க பெரும் கண்ணாடிகள் மற்றும் காற்றில் கந்தகத்தை கலப்பது,காற்றில் இருக்கும் கரிமத்தை செயற்கயாகப் பிரித்து நிலத்திற்கு அடியில் சேர்ப்பது, வறட்சியை தாங்கும் மரபணு மாற்றப்பட்ட பயிர் வகைகள் போன்ற பல தொழில்நுட்பத் தீர்வுகள் உள்ளனவே” என்றார் கோதை “இது போன்ற தொழில்நுட்பங்கள் அதிக ஆற்றல் கோருபவையாக உள்ளன. இவற்றை பயன்படுத்துவதின் மூலம் கரிம உமிழ்வு தொடர்ந்து அதிகரிக்கும். மேலும் இவற்றின்…
-
25. தீர்வு-2
“நாம் காலநிலை பிறழ்வின் விளைவுகளில் இருந்து தப்பிக்க ஒரு சிறு சமூகமாக என்ன செய்யலாம்?” எனக் கேட்டார் கோதை “மக்கள் உயிர் வாழ அடிப்படைத் தேவைகளான காற்று, நீர், உணவு, உறைவிடம், உடை அனைத்துமே இன்று பாழடைந்துவிட்டன, அவற்றின் மேல் இருந்த சம உரிமையையும் மக்கள் இழந்துவிட்டனர். இனி உணவும், நீரும், உடையும் எங்கிருந்தும் வராது என்ற காலகட்டத்தில் உள்ளோம். எனவே இவற்றிற்கான பாதுகாப்பை மக்கள் இயற்கையிடம் அடையவேண்டும்” என்றார் தவ்வை “இயற்கையிடம் எப்படி மனிதர்களுக்கான பாதுகாப்பை…
-
26. தவ்வையின் அறிமுகம்
“ஒன்றறி வதுவே உற்றறி வதுவே இரண்டறி வதுவே அதொடு நாவே மூன்றறி வதுவே அவற்றொடு முக்கே நான்கறி வதுவே அவற்றொடு கண்ணே ஐந்தறி வதுவே அவற்றொடு செவியே என்று ஐம்புல அறிவைக் கூறிவிட்டுப் பின்னர், ஆறறி வதுவே அவற்றொடு மனனே” எனப் பாடிக் கொண்டிருந்தார் தவ்வை “இந்தப் பாடலுக்கு என்ன பொருள்?” என்றான் நந்தன் “இந்தத் தொல்காப்பியப் பாடல் உயிர்களை தொடு உணர்ச்சி மட்டுமே உள்ள, புவியில் முதலில் தோன்றிய எளிய ஓரறிவு உயிரினங்களில் இருந்து மன…
-
27. தவ்வையின் எச்சரிக்கை
“அறிவியல் மேல் உள்ள நம்பிக்கையை எப்படி தவறு எனக் கூறுகிறீர்கள்?” என்றார் கோதை “இன்றைய அறிவியலைக் கட்டுப்படுத்துவது பெரும் உற்பத்தி சார்ந்த வணிகமே. லாபம் ஈட்டும் அறிவியல் ஆய்வுகள், அவை தீங்கு விளைவிப்பையாக (அணு ஆயுதங்கள், மரபணு மாற்றம், கண்காணிப்பு தொழில்நுட்பம் மற்றும் பல) இருந்தாலும் அவை ஊக்குவிக்கப்படுகின்றன. விஞ்ஞானிகள் தங்கள் ஆய்வுகளை சுயவிமர்சனம் செய்யவும், தவறுகளைச் சுட்டிக் காட்டவும் அனுமதிக்கப்படுவதில்லை. பல விஞ்ஞான அழிவுத் தொழில்நுட்பங்கள் போருக்காகவும், சுயநலம் சார்ந்த வணிகத் தேவைக்காக உருவாக்கப்படுகின்றன. மக்களுக்கான…