-
நாம் தொடங்குவதற்கு முன்பே, ‘காலநிலை மாற்றத்திற்கு எதிரான போராட்டத்தை’ இழந்துவிட்டோம், பிரச்சனையை நாம் பார்க்கும் விதத்தில் இருந்து. ‘நாம்’ என்பது பொருத்தமான இனம் அல்ல, ‘சண்டை’ என்பது சரியான உருவகம் அல்ல. ‘வெற்றி’ பற்றிய நமது கருத்துக்கள் அனைத்தும் இயற்கையின் மேலாதிக்கத்தையே சார்ந்துள்ளது, அதனால்தான் நாம் முதலில் ‘இழக்கிறோம்’. உண்மையான வெற்றிக்கு ஒரு அளவிலான தியாகம் தேவைப்படும். நாங்கள் பெருநிறுவனங்களால் ஆளப்படும் முடி இல்லாத குரங்குகளின் கூட்டமாக இருக்கிறோம், மோசமான வானிலையுடன் சண்டையிடுகிறோம். இது போல் முட்டாள்தனமானது.…
-
Collapse
We have lost the ‘fight against climate change’ before we started, simply from the way we look at the problem. ‘We’ are not the relevant species and ‘fighting’ is not the right metaphor. All of our ideas of ‘victory’ hinge on further domination of nature which is why we’re ‘losing’ in the first place. Actual…
-
Life and fuel
Life needs energy. Mostly it will be food for animals, which is produced by plants for themselves and most other life forms. But modern humans need a different kind of energy to live. It is necessary for them to lead a normal, comfortable life and it is not food. Food is secondary when compared to…
-
ந(ர)க(ர)ம்
நான் நகரங்களை பெரிதாக விரும்புவதில்லை. அதற்கு பல காரணங்கள் உண்டு. அதில் முதன்மையானது, நகரங்களின் சுரண்டல். நகரங்கள் தமக்கான எதையும் உற்பத்தி செய்வதில்லை. தேவையான அனைத்து பொருட்களும் வேறு எங்கிருந்தோ வருகின்றன. வேறு எங்கோ ஒரு வயலில் விளைந்த உணவு நகரத்திற்கு பெரிய அளவில் வருகிறது. வேறு யாருக்கோ உரிமையுள்ள நீர் ராட்சச மோட்டார்களின் மூலம் உறிஞ்சப்பட்டு குழாய்கள் மூலம் நகரத்து வீடுகளுக்கு வருகிறது. ஒரு நகரம் தொடர்ந்து வாழ அதன் வரி வருவாய் அதிகரிக்க வேண்டும்.…
-
ஐரோப்பாவின் ஆறுகள்
ஐரோப்பாவில் மத்தியில் அமைந்துள்ள ஆல்ப்ஸ் மலைத்தொடர் ஐரோப்பாவின் நீர் ஆதாரங்களான பல ஆறுகளுக்கு தாயகமாக உள்ளது. வேளாண்மை, வணிகம், சுற்றுலா, நீர் மின்நிலையங்கள், அணு மின்நிலையங்கள், கப்பல் போக்குவரத்து என ஐரோப்பாவின் உயிர் நாடியாக விளங்குவது இந்த பனிச்சிகரங்களில் உருவாகும் ஆறுகளே. 1. ரைன் ஆறு: ரைன் ஆறு சுவிஸ் ஆல்ப்ஸில் உருவாகி சுவிட்சர்லாந்து, லிச்சென்ஸ்டீன், ஆஸ்திரியா, ஜெர்மனி, பிரான்ஸ் மற்றும் நெதர்லாந்து வழியாக பாய்ந்து வட கடலை அடைகிறது (North Sea). இது ஐரோப்பாவின் மிக…
-
கடலின் கரிம சேமிப்பு
கரிம சேமிப்பு காற்றைத் தவிர மற்ற இடங்களில் சேமிக்கப்படும் கரிமத்தைக் குறிக்கிறது. கடல் இதில் பெரும் பங்கு வகிக்கிறது. வளிமண்டலத்தில் உள்ள கரிமத்தை உயிர்கள் மூலமாகவும், நேரடியாகவும் மற்றும் சேமிக்கிறது. உயிர் கரிமப் பொருட்கள், நிலக்கரி, எண்ணெய், இயற்கை வாயுக்கள், மீத்தேன் ஹைட்ரேட் மற்றும் சுண்ணாம்புக் கற்கள் அனைத்தும் கரிம சேமிப்புகளே. கடலின் மேற்பரப்பில் இருக்கும் குளிர்ந்த நீர் நேரடியாக கரியமிலவாயுவை உறிஞ்சி மிக எளிதாக சேமிக்கிறது. வளிமண்டலத்தை விட கடல் நீரில் 50 மடங்கு அதிக…
-
Ocean Carbon sink
A carbon sink is a natural or artificial reservoir that absorbs and stores the atmosphere’s carbon with physical and biological mechanisms. Organic matter, Coal, oil, natural gases, methane hydrate and limestone are all examples of carbon sinks. Ocean carbon pump is composed of two compartments: a biological pump which transfers surface carbon towards the seabed…
-
1. தவ்வை
12 வயதான நந்தனும் 16 வயதான வானதியும் பெரும் மலை காட்டின் அருகே இருக்கும் சிற்றூரில் வளர்ந்திருந்தாலும் பெரு மரங்களையோ, அடர்ந்த காட்டையோ பார்த்ததில்லை. பச்சை பசேலென்று இருக்கும் காட்டை, மலை முகடுகளைப் பார்க்க இருவருக்கும் பேராவல். ஒரு நாள் தொலைவில் உள்ள ஒரு மலையில் இருக்கும் காட்டை பார்க்கலாம் என இருவரும் கிளம்பினர். பெரு மழை பெய்து முடித்திருந்தது. இப்போது அந்த மலை பச்சை போர்வை போர்த்தியது போல அவர்களுக்கு காட்சியளித்தது. ஆங்காங்கே வெள்ளி கம்பிகள்…
-
2. புவியின் அங்கங்கள்
நந்தனும், வானதியும் எவ்வளவு யோசித்தும் அது என்ன பூ என இருவராலும் கண்டுபிடிக்க முடியவில்லை. வருத்தத்துடன் தவ்வையின் முகத்தை நோக்கினர். தவ்வை சுற்றி இருக்கும் மரங்களில் ஒன்றை காட்டி “இவற்றில் ஒன்று தான் அது” எனக் கூறினார். வேகமாக மரங்களைச் சுற்றி ஓடி ஒரு அத்தி மரத்தின் அடியில் வந்து நின்றனர். “இதோ காணாமல் பூ பூக்கும் மரம்” எனக் கூவினர். “நன்று. அத்தி மரம் வழக்கமான மரங்களைப் போல் பூ வைப்பதில்லை.சரி வாருங்கள் இப்போது புவி…
-
3. ஒளி
மறுநாள் காலை, பொழுது விடிவதற்குள்ளாகவே கிளம்பி விட்ட நந்தனும், வானதியும் மலையை நோக்கி நடக்கத் தொடங்கினர். ஆனால் தவ்வையின் கேள்விக்கு அவர்களிடம் பதில் இல்லை. போகும் வழியில் மலையடிவாரத்தில் ஒரு எள் வயலில் பாட்டி ஒருவர் களை எடுப்பதைப் பார்த்தவர்கள், பாட்டியிடம் பதில் இருக்கலாம் என அவரிடம் சென்றனர். கேள்வியைக் கேட்ட பாட்டி, வயலின் வேலியோரத்தில் வளர்ந்திருந்த ஒரு மரத்தைக் காட்டி அந்த மரம் தான் தவ்வையின் கேள்விக்குப் பதில் என்றார். மரத்தை உற்று நோக்கியவர்களுக்கு அது…