-
14. காடுகள்
நந்தனும் வானதியும் தவ்வை கூறியபடியே ஊரில் இருந்த கோவில் காடுகளைச் சுற்றிப் பார்க்க கிளம்பினர். அங்கிருந்த பல்வேறு மரங்களை பார்த்துவிட்டு ஓடைக்கரை வழியாக சோலைக்காட்டிற்கு முன்பு இருந்த ஒரு காட்டை அடைந்தனர். “மணிநீரும் மண்ணும் மலையும் அணிநிழற்காடும் உடைய தரண்” என்ற குறளை பெரிய பலா மரத்தின் அடியில் அமர்ந்து தவ்வை பாடிக் கொண்டிருந்தார் “இந்தத் திருக்குறளின் பொருள் என்ன?” என்றாள் வானதி “தெளிந்த நீரும், வெட்ட வெளியான நிலமும், மலையும்,குளிர்ந்த நிழலையுடைய காடும், ஆகியவை ஒரு…
-
15. உயிரும் உணவும்
மறுநாள் காலையில் காலை உணவுக்கு முன்பே வானதியும், நந்தனும் மலையடிவாரத்தில் இருந்த தீவை அடைந்தனர். தவ்வை அங்கிருந்த சிறு பரிசலில் (வட்டமான படகு) அவர்களுக்காகத் தயாராக இருந்தார். இருவரும் பரிசலில் ஏறியதும் தவ்வை “உண்டிகொடுத்தோர் உயிர்கொடுத்தோரே; உணவு எனப்படுவது நிலத்தொடு நீரே” எனப் பாடிக் கொண்டே துடுப்பைக் கொண்டு படகை தீவை நோக்கிச் செலுத்தினார். “இந்த பாடலுக்கு என்ன பொருள்?” என்றாள் வானதி “உணவு என்பது நீரும், நிலமும் சேர்ந்த கலவை” என்றார் தவ்வை. “உணவு திடப்…
-
16. உயிர்ப்பன்மையம்
நந்தனும் வானதியும் மறுநாள் காலை தினை மாவை தேனுடன் சேர்த்து உண்ட பிறகு சோலைக்காட்டிற்கு கிளம்பினர். போகும் வழியில் இருந்த விலங்குகள், பறவைகள், மரங்கள், செடிகளின் வகைகளை குறித்துக் கொண்டே சென்றனர். பல விதமான பறவைகளின் ஒலி, பூச்சிகளின் ரீங்காரம், பல விலங்களின் ஒலி, சலசலவென்று ஓடும் ஓடை என அனைத்தையும் கேட்டுக்கொண்டே ஓடைக்கரையில் நடந்தனர். சோலைக்காட்டின் மத்தியில் இருந்த பெரிய மரத்தடியில் அமர்ந்திருந்த தவ்வை “மாயோன் மேய காடுறை உலகமும்சேயோன் மேய மைவரை உலகமும்வேந்தன் மேய…
-
17. அதிகரிக்கும் வெப்பம்
அடுத்த நாள் நண்பகலில் நந்தனும் வானதியும் தங்கள் தாய் கோதை மற்றும் தங்கைகள் யாழினி, எழிலியுடன் தவ்வையைக் காண ஆற்றங்கரைக்குச் சென்றனர். தவ்வை அங்கிருந்த பெரிய இச்சி மரத்தின் அடியில் அமர்ந்திருந்தார். தவ்வைக்கு தங்களின் தாய் மற்றும் தங்கைகளை அறிமுகப்படுத்தினான் நந்தன். “வணக்கம் தவ்வை. புவியின் வெப்பம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது, இதனால் பல இன்னல்களை நாம் சந்திக்கிறோம் எனச் செய்திகள் வருகின்றனவே. இதைப் பற்றி உங்களிடம் உரையாடலாம் என இங்கு வந்தேன்” என்றார் கோதை “உங்களுக்கு…
-
18. காலநிலைப் பிறழ்வு
அடுத்த நாள் காலையில் கடும் வெயில் அடிக்கத் தொடங்கி இருந்தது. காற்றின் புழுக்கம் அதிகரித்து இருந்தது. மதிய உணவாக மாங்காயில் இருந்து செய்யப்பட்ட புளிக் குழம்பு, நெல்லரிசிச் சோறு, மோர் போன்றவற்றை மதிய உணவுக்காக எடுத்துக் கொண்டு கோதையும், வானதியும், நந்தனுடன் சேர்ந்து புதர்க்காட்டுக்கு கிளம்பினர். காட்டாற்றங்கரையில் இருந்து தொலைவில் இருந்த இலந்தை மரத்தடியில் தவ்வை அமர்ந்து “முல்லையும் குறிஞ்சியும் முறைமையில் திரிந்து நல்லியல்பு இழந்து நடுங்குதுயர் உறுத்துப் பாலை என்பதோர் படிவம் கொள்ளும்” என்ற சிலப்பதிகாரப்…
-
19. உணவும் உடல்நலமும்
அனைவரும் மதிய உணவை உண்டுவிட்டு காட்டாற்று வெள்ளம் எப்போது வடியும் எனக் காத்துக் கொண்டிருந்தனர். “உணவுப் பாதுகாப்பு என்றால் என்ன?” எனக் கேட்டான் நந்தன் “அனைத்து மக்களுக்கும் உணவுத் தேவைகளைப் பூர்த்தி செய்யப் போதுமான உணவு கிடைப்பதே உணவுப் பாதுகாப்பு. இது காலநிலைப் பிறழ்வின் விளைவுகளான கடும் வறட்சி, அதீத மழைப் பொழிவு, வெள்ளம், பருவம் தவறிய வானிலை, கடும் வெப்பம் போன்றவற்றால் உணவு உற்பத்தி பாதிக்கப்படுகிறது. இதில் கடும் வெப்பம் பெரும் பங்கு வகிக்கிறது” என்றார்…
-
20. மனிதர்களின் வளர்ச்சி
கோதை தன் பிள்ளைகளுடன் மறுநாள் காலை மலைஇடுக்கில் உள்ள சிறிய பள்ளத்தாக்கை அடைந்தார். அங்கு தவ்வை பாறைகளை பார்த்துக் கொண்டிருந்தார். “பாறைகளில் என்ன ஆராய்ச்சி செய்கிறீர்கள்” எனக் கேட்டான் நந்தன் “இந்தப் பாறைகள் ஒவ்வொன்றும் ஒன்றன் மேல் ஒன்று அடுக்கி வைக்கப்பட்டது போல் உள்ளன. ஒவ்வொரு அடுக்கும் புவியின் ஒரு காலகட்டத்தில் உருவானவை. இவற்றில் இருந்து புவியின் கடந்தகால சுற்றுச் சூழல், பருவநிலை போன்றவற்றை அனுமானிக்கலாம். சில பாறைகள் பெரும் ஊழிக் காலத்தில் உருவானவை” என்றார் தவ்வை…
-
21. பொருளாதாரம்
மறுநாள் ஊர் சந்தையில் தவ்வையைக் கண்டனர் மூவரும். அங்கிருந்த பெரிய ஆலமரத்தடியில் “நீரின் வந்த நிமிர்பரிப் புரவியும்காலின் வந்த கருங்கறி மூடையும்வடமலைப் பிறந்த ஆரமும் அகிலும்தென்கடல் முத்தும் குணகடல் துகிரும்கங்கை வாரியும் காவிரிப் பயனும்ஈழத்துண்ர்வும்” எனப் பாடிக் கொண்டிருந்தார் தவ்வை “இந்தப் பாடலின் பொருள் என்ன?” என்றார் கோதை “கடல் வழியாக வரப்பெற்ற குதிரைகள், நிலவழியாகக் கொண்டு வரப்பட்ட மிளகு, வடக்கு மலைகளிலிருந்து வந்த வைரக்கற்கள் மற்றும் பொன், மேற்கு மலைகளில் கிடைக்கின்ற அகில் சந்தனம் தென்கடல்…
-
22. வளம் குன்றாத வளர்ச்சி
மறுநாள் இரவு முழுமதி வெளிச்சத்தில் தவ்வைக்காக வீட்டிற்கு வெளியே உணவுடன் மூவரும் காத்திருந்தனர். சிறிது தூரத்தில தவ்வை வருவதைக் கண்ட நந்தன், தவ்வையை நோக்கி ஓடினான். அனைவரும் உணவருந்திய பின் உரையாடல் தொடங்கியது. “வளம் குன்றாத வளர்ச்சி என்றால் என்ன?” என்றாள் வானதி “வளமும் மனித இன வளர்ச்சியும் நேர் எதிரானவை. எளிதாகக் கிடைக்கும் புவியின் வளங்களைச் சிதைத்தே மனித இனம் வளர்ச்சி அடைந்துள்ளது. வளர்ச்சியின் கழிவுகளும் (கரியமில வாயு, நெகிழி, அணுக் கழிவு மற்றும் பல)…
-
23. அதீத நுகர்வு
“பேருந்தில் இருந்து இறங்கிய மூவரும் நகரத்தில் முதலில் உணர்ந்தது அதீத வெப்பம். நகரத்தின் நுழைவுவாயிலில் தவ்வை காத்துக் கொண்டிருந்த தவ்வையிடம் ” இங்கு ஏன் வெப்பம் அதிகமாக இருக்கிறது” என்றான் நந்தன். “கான்கிரீட்டால் கட்டப்படும் சமதளக் கூரைக் கட்டிடங்கள் வெப்பத்தை அதிக அளவில் உள்வாங்கி மிக மெதுவாக வெளியிடுகின்றன. நகரங்களில் மிக நெருக்கமாகக் கட்டப்படும் கட்டிடங்கள் வெளியிடும் வெப்பம் எளிதாக அவ்விடங்களை விட்டு வெளியேறுவதில்லை. இதனால் நகரங்கள் அதன் சுற்றுப்புறத்தை விட வெப்பமாக உள்ளது. இந்த விளைவை…