-
4. பருவங்கள்
வீடு திரும்பிய நந்தனும் வானதியும் மாலையில் மற்ற சிறார்களுடன் விளையாடச் சென்றனர். அங்கு கண்ணாமூச்சி, ஒளிகண்டு, தொட்டு விளையாட்டு என பல விளையாட்டுக்களை விளையாடினர். சில சிறுவர்கள் தனியாக ஒரு விளையாட்டை ஆடிக் கொண்டிருந்ததைப் பார்த்ததும் வானதிக்கு தவ்வையின் கேள்விக்கு பதில் கிடைத்துவிட்டது. அடுத்த நாள் காலை உணவை முடித்த பின் மலையடிவாரத்தை நோக்கி இருவரும் கிளம்பினர். அங்கிருந்த பெரிய வேப்பமர நிழலில் தவ்வை ஒரு பாடலைப் பாடிக் கொண்டிருந்தார் “வாள் நிற விசும்பில் கோள்மீன் சூழ்ந்த…
-
5. வெப்பம்
அதிகாலையில் நந்தனும், வானதியும் மலையை நோக்கிப் பயணத்தைத் தொடங்கினர். நேற்றுச் சென்ற ஓடை வழியாகவே காட்டுக்குள் சென்றனர். அதிகாலை நேரத்தில் வழிதோறும் பல்வேறு பறவைகள் எழுப்பிய இனிமையான சத்தங்களை கேட்டுக் கொண்டே நடந்தனர். மெதுவாக பொழுது புலர்ந்து கொண்டிருந்தது. அவ்வேளையில் மலை உச்சியில் இருக்கும் மொட்டைப் பாறையை அடைந்து விட்டனர். காட்டின் உள்பகுதியில் இருந்த குளிர்ச்சி மறைந்து வெப்பம் மெதுவாக அதிகரிக்கத் தொடங்கி இருந்தது.கிழக்கில் எழும் பொழுதை பார்த்தவாறு மொட்டைப் பாறையில் அமர்ந்திருந்தார் தவ்வை. “நேற்றைய கேள்விக்குப்…
-
6. காற்று
நேற்றைய கேள்விக்கு தாயிடம் பதில் இருந்தது, இன்றைய கேள்விக்கு யாரிடமும் பதில் இல்லையே என்ற கவலையுடன் நந்தனும், வானதியும் உறங்கச் சென்றனர். மெலிதாக அடித்த தென்றல் காற்றால் புழுக்கம் இல்லாமல் நன்றாக உறங்கினர் இருவரும். அதிகாலையில் அவர்கள் எழும் போது நல்ல குளிர்ந்த காற்று அவர்களை வருடிச் சென்றது. விடுகதைக்கு பதில் கிடைத்துவிட்டது என வானதி நந்தனின் காதில் கிசுகிசுத்தாள். பிறகு இருவரும் இன்றைக்கு தவ்வைக்கு நம் வீட்டு உணவை கொடுப்போம் என கம்மங்கூழையும், மோரையும் உரிச்சட்டிகளில்…
-
7. வெப்பத் தேக்க விளைவு
மறுநாள் காலை உணவு உண்ட பின் நந்தனும் வானதியும் மலையின் மறுபுறம் இருக்கும் சோலைக்காட்டிற்கு கிளம்பினர். வெப்பம் அதிகமாக இருந்ததால் மலையடிவாரத்தில் இருந்த பெரிய ஆலமரத்தின் கீழ் சிறிது நேரம் ஓய்வெடுத்துவிட்டு மலையறேத் தொடங்கினர். மலையில் ஏறும் போது காற்றின் வெப்பம் தொடர்ந்து குறைந்து வருவதை உணர்ந்தனர், காற்றின் வேகமும் அதிகரித்து இருந்தது. இதனால் குளிர் அதிகமாக இருந்தது. மலையின் இடையே இருந்த பள்ளத்தாக்கில் நீண்டு உயர்ந்த பெரும் மரங்கள் நிரம்பி இருந்தன. அங்கு ஒரு பெரிய…
-
8. நீர்
அதிகாலையில் இருவரும் குளிர்ந்த நீரில் குளித்த பின் சிகப்பரிசி கஞ்சியையும், கருப்பட்டி சேர்த்த தேங்காய்த் துருவலையும் உண்டுவிட்டு கிளம்பினர். இருண்ட வானத்தை நோக்கிய போது நேற்றைய கேள்விக்கான விடை அங்கு இருந்ததைக் கண்டனர். சிறிது நாள் முன்பு சென்ற ஓடையை பின்தொடர்ந்து சென்றால் ஓடைகளின் கூடலை அடையலாம் என ஓடை வழியில் சென்றனர். போகும் வழியெல்லாம் சிறு ஓடைகள், வாணிகள் என அவர்கள் தொடர்ந்த ஓடையில் கலந்து கொண்டே இருந்தன, ஓடையின் நீர்வரத்தும் அதிகரித்துக் கொண்டே இருந்தது.…
-
9. நீராவி
முந்தைய நாள் ஆற்றில் வெகுநேரம் நீந்தி விளையாடிய களைப்பால் வானதியும் நந்தனும் காலை பொழுது விடியும் வரை அசந்து தூங்கிவிட்டனர். பறவைகளின் ஒலியும், சேவல் கூவுவதையும் கேட்டு விழித்தவர்கள் நேரமாகிவிட்டது என விரைவாகக் குளிக்கக் கிளம்பினர். அவர்களின் தாய் கேழ்வரகில் செய்திருந்த கார ரொட்டியையும், இனிப்பு புட்டையும் உண்ட பின் பானையில் இருந்த நீரை குடிக்கச் சென்ற நந்தனுக்கு நேற்றைய விடுகதைக்கு பதில் புலப்பட்டுவிட்டது. வானதியிடம் விடையைப் பகர்ந்து கொண்ட பின் இருவரும் ஓட்டமும் நடையுமாக ஆற்றை…
-
10. மழை
வானதியும் நந்தனும் அடுத்த நாள் அதிகாலைக்கு முன்பே கிளம்பிவிட்டனர். புதர்க்காடு மிகவும் வறண்ட நிலம், அங்கு உண்ண எதுவும் கிடைக்காது என அவர்களின் தாயார் எச்சரித்ததால் கேழ்வரகு களி, மோர் இரண்டையும் சட்டிகளில் ஊற்றிக் கொண்டு, ஒரு குடுவையில் நீருடன் கிளம்பினர். புதர்க்காட்டில் எங்கு நோக்கினும் சில மரங்களும், வறண்ட புற்களும் அங்கங்கே இருந்தன. எங்கும் பசுமை இல்லை. அப்போது ஒரு இனிமையான பாடல் ஒலிக்கத் தொடங்கியது. “விசும்பின் துளிவீழின் அல்லால் மற்றாங்கேபசும்புல் தலைகாண்பது அரிது“ தவ்வை…
-
11.கடல்
நந்தனும் வானதியும் அடுத்த நாள் காலையில் ஊரை விட்டு சிறிது தொலைவில் இருந்த ஏரிக்கு கிளம்பினர். அந்த ஏரி ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது, அதற்கு நீர் ஆற்றின் கிளை ஒன்றின் மூலம் வருகிறது, ஏரியின் பரப்பளவு மிகப் பெரியது, இதனால் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் விளைநிலம் செழிப்படைகிறது என்றும் அவர்களின் தாய் விளக்கியிருந்தார் ஏரியை அடுத்த பெரிய மணல் திட்டை அடைந்த போது பொழுது வானில் ஏறிக் கொண்டிருந்தது. அங்கிருந்த புன்னை மரத்தடியில் தவ்வை அமர்ந்திருந்தார். “மழையில்…
-
12. உறைபனி
“இன்று நாம் மிகவும் குளிரான இடத்திற்குச் செல்லப் போகிறோம். வானம் நன்றாகக் கறுத்து உள்ளது, விரைவில் மழை பெய்யலாம். நாம் நனையாமல் இருக்க தலைக்கு பனையோலை தொப்பியை அணிந்து செல்வோம்” என்றாள் வானதி மிளகு, நெய் சேர்த்து சமைக்கப்பட்ட சூடான பருப்புச் சோறை நன்றாக உண்ட பின் இருவரும் மலையேறத் தொடங்கினர். ஓடைக்கரையைத் தாண்டி சோலைக்காடு வழியாக மலை உச்சியை அடைந்தனர். அங்கு மரங்களே இல்லை, எங்கும் பெரும் புல்வெளிகளே இருந்தன. மிகவும் குளிரான காற்று கிழக்கில்…
-
13. கடல் நீரோட்டம்
கடல் நீரோட்டத்திற்கும். கிணற்றுக்கும் என்ன தொடர்பு என பேசிக் கொண்டே இருவரும் உறங்கச் சென்றனர். அடுத்த நாள் நண்பகல் உணவாக பிரண்டைத் துவையலையும், கம்மங்கூழையும் குடித்த பின் வயலுக்கு அருகில் இருக்கும் பெரிய கிணற்றுக்குச் சென்றனர். சிறார்களைப் பார்த்ததும் கிணற்றுக்குள் ஓரிடத்தில் மெதுவாக இறங்கி, நீரின் தன்மையை அறியச் சொன்னார் “இங்கு நீர் வெப்பாக இருக்கிறது” என்றான் நடுக்கிணற்றில் இருந்த நந்தன். கிணற்றின் ஓரத்திற்கு நீந்திச் சென்ற வானதி நீர் அங்கு குளுமையாக இருப்பதை உணர்ந்தாள். “ஏன்…